ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும்; மத்திய ரெயில்வே மந்திரி பேச்சு

வருகிற செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும்; மத்திய ரெயில்வே மந்திரி பேச்சு
Published on

புவனேஸ்வர்,

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் 67வது ரெயில்வே விருது வழங்கும் விழா நடந்தது. இதில், மத்திய ரெயில்வே, தொலைதொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கி பேசிய மத்திய ரெயில்வே மந்திரி வைஷ்ணவ், வருகிற செப்டம்பர் முதல் ஒவ்வொரு மாதமும் 4-5 வந்தே பாரத் ரெயில்கள் தொடங்கி வைக்கப்பட்டு இயக்கப்படும் என கூறினார்.

அதிவேக புல்லட் ரெயில்களுக்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில், மத்திய ரெயில்வே இணை மந்திரி ராவ்சாகிப் பாட்டீல் தன்வே மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com