மகா கும்பமேளா பயணிகள் மினி பஸ் விபத்து; 4 பேர் பலி

மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்ற பக்தர்களின் மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலி. 10 பேர் காயமடைந்தனர்.
மகா கும்பமேளா பயணிகள் மினி பஸ் விபத்து; 4 பேர் பலி
Published on

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள 21 பக்தர்களை ஏற்றி சென்ற மினி பஸ் பதேபூர் மாவட்டம் அருகே டிராக்டர் டிரெய்லர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துக்குவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மினி பஸ் டிரைவர் விவேக் சிங் (27), யாத்ரீகர்கள் பிரேம் காந்த் ஜா (55), திகம்பர் ஜா (52), விமல் சந்திர ஜான் (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுடெல்லியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com