உ.பி.: கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள் - 4 பேர் பலி

விபத்தில் 25 பேர் படுகாயமடைந்தனர்.
உ.பி.: கடும் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து மோதி தீப்பற்றி எரிந்த வாகனங்கள் - 4 பேர் பலி
Published on

லக்னோ,

டெல்லி, மராட்டியம், அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, காலை நேரங்களிலும், மாலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அவதியடைந்துள்ளனர். பனிமூட்டத்தால் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தலைநகர் டெல்லி உத்தரபிரதேசத்தின் ஆக்ரா இடையேயான எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மையால் சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. உத்தரபிரதேசத்தின் மதுரா அருகே இந்த விபத்து ஏற்பட்டது. 2க்கும் மேற்பட்ட பஸ்கள், கார்கள், வேன்கள் என அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் 4 உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com