

புதுடெல்லி
கிழக்கு டெல்லியில் கஞ்சாவ்லா எனும் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இக்கொலை குற்றவாளிகளில் ஒருவரின் தங்கையை கொல்லப்பட்ட நபர் தொடர்ந்து பாலியில் ரீதியில் தொல்லைக்கொடுத்து வந்ததாக தெரிய வந்துள்ளது. அப்படி செய்யக்கூடாது என்று பலமுறை எச்சரிக்கப்பட்டும் வாலிபர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை என்று விசாரணையின் போது கூறப்பட்டுள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் வாலிபரின் பிணத்தை காவல்துறையினர் மீட்டனர். அவரது கழுத்து அறுக்கப்பட்டு, நாற்காலியில் கட்டப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
கொலையில் தொடர்புடைய நால்வரில் ஒருவருடன் வாலிபர் கஞ்சா உட்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. விசாரணை முடுக்கி விடப்பட்டு நாலவரும் நேற்று கைது செய்யப்பட்டனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
கடந்த 16 ஆம் தேதியன்று நால்வரும் வாலிபருடன் கஞ்சா உட்கொண்டுள்ளனர். பின்னர் அவர்களில் ஒருவன் இறைச்சி வெட்டும் கத்தியால் வாலிபரின் கழுத்தை வெட்டியுள்ளான். அக்கத்தியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.