டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து - 4 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.

மொராதாபாத் - சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com