பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 4 பேர் பலி

சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து - 4 பேர் பலி
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டம் நங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. வாடகை வீட்டில் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com