ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நேற்றிரவு அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்
Published on

புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 மணிநேரத்தில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றில் ரிக்டர் அளவில் 4.7 கொண்ட முதல் நிலநடுக்கம் இரவு 10.42 மணிக்கு ஏற்பட்டது. பின்னர் 6 நிமிடங்கள் கழித்து ரிக்டர் அளவில் 5.5 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த இரு நிலநடுக்கங்களும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனை அடுத்து இரவு 10.58 மணியளவில் 4.6 ரிக்டர் அளவிலும், இரவு 11.20 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்நிலநடுக்கங்கள் முறையே 36 மற்றும் 63 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. எனினும் இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

இதேபோன்று அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதியில் இரவு 10.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகி இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com