கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்

மத்தியபிரதேசத்தில் 20 வயது கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்
Published on

போபால்

மத்திய பிரதேசம் மகாராண பிரதாப் பகுதியை சேர்ந்த ரம்யா என்ற 20 வயது மாணவி, கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று, இவரது கல்லூரியில் படித்த சீனியர் மாணவர் சைலேந்திர தாங்கி (21), காபி குடிக்க வருமாறு ரம்யாவை அழைத்துள்ளார். இதனை கேட்டு ரம்யாவும் அங்கு சென்றுள்ளார். அங்கு இவர்கள் இருவருக்குள்ளும் கல்லூரியில் நடைபெற்ற பழைய பிரச்சினை குறித்து பேசியபோது, வாக்குவாதம் முற்றியுள்ளது.

அதன்பின்னர், ரம்யாவை சமாதானப்படுத்தி தனது நண்பனான சோனு தாங்கி (21) என்பவன் தங்கியிருந்த அறைக்கு அழைத்து சென்றுள்ளார். ரம்யா அழைத்து வருவதற்கு முன்னர், சோனு திராஜ் ராஜ்புத் (26) மற்றும் சிமர் ராஜ்புத் (25) ஆகிய இருவரையும் அங்கு வருமாறு கூறி சென்றுள்ளான். அதன்படி, ரம்யாவை அறைக்கு அழைத்து சென்று 4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரின் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை போலீசார் ஊர்வலமாக அழைத்து சென்றபோது, ரோட்டில் உள்ள மக்கள் 4 இளைஞர்களையும் அடித்து உதைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com