மின்விசிறி ஆடுது... சோபா திடீர்னு நகர்ந்தது...! நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த 4 நிமிஷம் குஷ்பு அதிர்ச்சி டுவீட்

டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார்.
மின்விசிறி ஆடுது... சோபா திடீர்னு நகர்ந்தது...! நிலநடுக்கம் ஏற்பட்ட அந்த 4 நிமிஷம் குஷ்பு அதிர்ச்சி டுவீட்
Published on

புதுடெல்லி

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானதாக இந்திய நில அதிர்வு மையம் தனது duவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது. பைசாபாத்திலிருந்து தெற்கு, தென்கிழக்கே 156 கிலோ மீட்டர் தூரத்தில், 184 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நலடுக்கம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

இந்தியாவின் தலைநகர் டெல்லி, பஞ்சாப், காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.டெல்லியில் வீட்டில் உள்ள சோபா, கட்டில் உள்ளிட்ட அதிர்ந்த நிலையில், பொருட்களும் கீழே விழுந்தன. பேன்களும் அசைந்தன.திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் வேகமாக வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

டெல்லியில் நிலநடுக்கத்தை உணர்ந்த பிறகு தெருவில் தஞ்சம் அடைந்ததாக நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார்.அவர் தனது பதிவில்,

டெல்லி முழுவதும் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமார் 4 நிமிடம் வரை அது நீடித்த நிலையில் மின்விசிறிகளும், விளக்குகளும் அசைந்ததாகவும், சோப்பாக்கள் அடியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறிதாகவும் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com