சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டம் ஜாகர்குண்டா பகுதி வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் அதிரடிப்படை கமாண்டோக்கள் ரோந்து சென்றனர்.

அப்போது, பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் அவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

அதன்பிறகு அந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, 4 நக்சலைட்டுகளின் உடல்கள் கிடந்தன. கைத்துப்பாக்கியும், நாட்டு துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com