முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்: சிவசேனா கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது

முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக சிவசேனா கட்சி நிர்வாகிகள் நான்கு பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் கடற்படை அதிகாரி மீது தாக்குதல்: சிவசேனா கட்சி நிர்வாகிகள் 4 பேர் கைது
Published on

மும்பை

கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மதன் சர்மா என்பவரின் வீட்டுக்குள் புகுந்த சில ரவுடிகள் அவரை இழுத்து சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\

முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து சமூக ஊடகத்தில் வெளியான பதிவை வாட்ஸ்அப்பில் பகிர்ந்ததற்காக சிவசேனா கட்சி நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக 4 பேரைக் கைது செய்த போலீசார், இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மராட்டிய முன்னாள் முதல்வர் தேவேந்திர கூறும் போது "மிகவும் சோகமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம். ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி குண்டர்களால் தாக்கப்பட்டு உள்ளார். தயவுசெய்து குண்டர்கள் செயலை உத்தவ் தாக்கரே ஜி நிறுத்த சொல்லுங்கள். இந்த குண்டர்களுக்கு கடுமையான நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்," என்று அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com