அடுத்த வாரத்தில் இருந்து 4 சிறப்பு அமர்வுகள்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தகவல்

அடுத்த வாரத்தில் இருந்து 4 சிறப்பு அமர்வுகள் செயல்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

குற்ற வழக்குகளின் மேல்முறையீடு, நிலம் கையகப்படுத்துதல், நேரடி, மறைமுக வரி விவகாரம், வாகன விபத்து இழப்பீடு மேல்முறையீடு ஆகியவற்றை விசாரிக்க 4 சிறப்பு அமர்வுகள் அடுத்த வாரம் தொடங்கி செயல்படும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அறிவித்துள்ளார்

நேரடி, மறைமுக வரி விவகாரம் தொடர்புடைய வழக்குளை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்படும் என்றும், இந்த சிறப்பு அமர்வு, வரி விவகாரம் தொடர்புடைய வழக்குகளை புதன், வெள்ளிக்கிழமைகளில் விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com