ஜம்மு ராணுவ முகாமில் பாதுகாப்பு படை தாக்குதல்; தீவிரவாதிகள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ஜம்மு ராணுவ முகாமில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு ராணுவ முகாமில் பாதுகாப்பு படை தாக்குதல்; தீவிரவாதிகள் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
Published on

சஞ்வான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ முகாம் ஒன்றின் மீது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் வந்து நேற்று தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.

இதனை அடுத்து தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று 2வது நாளாக ராணுவ முகாமில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் இன்று 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பலியான தீவிரவாதிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com