காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது

காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. #KupwaraEncounter
காஷ்மீர் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்புவாரவில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது.

குபுவாராவின் அராம்போராவில் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகள் மறைந்து கொண்டனர். அவர்களை தேடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியது. மாலை 3:30 மணியளவில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் வெடித்தது என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்பு படை நடத்திய அதிரடி பதிலடி தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். மேலும் அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com