மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூர் மாநிலம் ஹிங்கோரானியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on: 

மணிப்பூர்,

மணிப்பூர் மாநிலம் ஹிங்கோரானி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் நேற்று முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலையில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குக்கி என்ற குழுவை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com