4 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு.! பெங்களூரில் அதிர்ச்சி

மாரடைப்பு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறியதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
4 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு.! பெங்களூரில் அதிர்ச்சி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் அபினந்தன். பா.ஜனதா மண்டல தலைவராக உள்ளார். இவரது மகன் வைஷ்ணவ் (வயது 4). இந்த சிறுவனுக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் தன் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

ஆரம்பத்தில், அது சாதாரண வயிற்று பிரச்சினை என்று கருதிய பெற்றோர், அவனுக்கு வீட்டில் வைத்தியம் செய்துள்ளனர். இருப்பினும், வைஷ்ணவின் உடல்நிலையில் எந்த முன்னேற்ற மும் ஏற்படாமல், நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சிறுவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறு வன் வைஷ்ணவ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும், சிறுவன் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்ததாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com