2 பேரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: 4 வாலிபர்கள் கைது

2 பேரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
2 பேரை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: 4 வாலிபர்கள் கைது
Published on

உப்பள்ளி: தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா ஆனந்த நகர் பகுதியில் சிலர் பொது இடத்தில் நின்று சிகரெட் பிடித்துள்ளனர். அப்போது அந்த வழியாக 2 பேர், அவர்களிடம் பொது இடத்தில் சிகரெட் பிடிக்காதீர்கள் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், 2 வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் 2 பேரையும் குத்தி கொலை செய்ய முயன்றனர்

இதுகுறித்து 2 பேர் கொடுத்த புகாரின் பேரில் பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக அதேப்பகுதியை சேர்ந்த ரபீக் (வயது 23), அல்தாப் (28), அஸ்லாம் (30) மற்றும் முகமது அலி (22) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com