

போர்ட் பிளேர்,
யூனியன் பிரதேசமான அந்தமான் நிகோபாரில் நேற்று ஒரே நாளில் புதிதாக 41 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது அங்கு அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் தொற்று பாதிப்புக்கு அங்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 2,945 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று பாதிப்புக்கு ஆளானோரில் 6 பேர் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் என்றும், மற்ற 35 பேர் தொடர்பு தடம் அறிந்ததில் பாதிப்பு உறுதியானவர்கள் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அங்கு 2 பேர் கொரோனாவுக்கு நேற்று பலியாகியும் உள்ளனர். அவர்களில் ஒருவர் 86 வயது மூதாட்டி, இன்னொருவர் 79 வயது ஆண் பக்கவாத நோயாளியும் ஆவார். அங்கு இந்த நோய்த்தொற்றை விரட்டியடித்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 139 ஆக உள்ளது. தற்போது 677 பேர் சிகிச்சையில் உள்ளனர்.