இந்திய ஐகோர்ட்டுகளில் 414 நீதிபதி காலியிடங்கள்

இந்திய ஐகோர்ட்டுகளில் 414 நீதிபதி காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஐகோர்ட்டுகளில் 414 நீதிபதி காலியிடங்கள்
Published on

புதுடெல்லி,

ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 நபர் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை மூலம் நியமிக்கப்படுகிறார்கள். கொலீஜியம் தனது பரிந்துரையை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பும். அமைச்சகம் உளவுப்பிரிவு மூலம் அந்த நபர்களின் பின்னணி குறித்து ஆய்வு செய்து இறுதி முடிவுக்காக சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியத்துக்கு அனுப்பும். இது ஒரு தொடர் கூட்டு நடவடிக்கை.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஓய்வுபெறுவது, ராஜினாமா செய்வது, பதவி உயர்வில் செல்வது போன்ற காரணங்களால் காலியிடம் ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 1,079. இதில் இந்த மாதம் 1-ந் தேதி நிலவரப்படி 414 நீதிபதி பதவிகள் காலியிடங்களாக உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com