மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்வு
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் சிதி என்ற இடத்தில் இருந்து சாட்னா என்ற இடத்திற்கு 54 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பாட்னா கிராமம் அருகே வந்த போது அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

காலை 7.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 35 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக ரேவா பிரதேச ஆணையர் ராஜேஷ் குமார் ஜெயின் கூறுகையில், இதுவரை 42 இறந்த உடல்களை மீட்டுள்ளோம். அந்த உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல் போனவர்களுக்கான ஸ்டாப் அணை வரை தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com