எஸ்.ஐ.ஆர் விவகாரம்: தேர்தல் கமிஷனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 42 பேர் கடிதம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில், தேர்தல் கமிஷனுக்கு ஓய்வுபெற்ற 42 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஞானேஷ்குமார்,
Published on: 

முன்னாள் நீதிபதிகள் கடிதம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், பா.ஜனதாவுக்கு சாதகமாக தன்னிச்சையாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. போராட்டமும் நடத்தி வருகின்றன.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள், பல்வேறு ஐகோர்ட்டுகளின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் என 42 ஓய்வுபெற்ற நீதிபதிகள், இந்திய மக்களுக்கு பகிரங்க கடிதம் எழுதி உள்ளனர்.

கர்நாடக ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுப்ரோ கமல் முகர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். தேர்தல் கமிஷன் மீது தாக்குதல்கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:-அமைதி காப்பது இனிமேலும் நடுநிலையாக இருக்காது என்பதால் நாங்கள் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்திய அரசியலமைப்பு சட்ட அமைப்புகள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.

அரசியல் நலன்கள்

குறிப்பாக, தாக்குதலின் மையப்புள்ளியாக தேர்தல் கமிஷன் இருக்கிறது. மிகவும் உயரிய இடத்தில் நாம் வைத்துப் பார்க்கும் நீதித்துறையை கூட விட்டு வைப்பதில்லை.இந்த தாக்குதல்கள், நியாயமான விமர்சனமாக இல்லை. அரசியல் நலன்களால் உந்தப்பட்ட திட்டமிட்ட பிரசாரமாக தோன்றுகிறது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் தேர்தல் கமிஷன் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

தேர்தல் சட்டம்

திருடர்கள் விமர்சிப்பது ஜனநாயக உரிமைதான், ஆனால் களங்கப்படுத்துவது அல்ல. அரசியலமைப்பு சட்ட அதிகாரிகளை 'திருடர்கள்', 'பொம்மைகள்', 'சமரசம் செய்தவர்கள்' என்றெல்லாம் பொதுவெளியில் பேசுகிறார்கள்.வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு தேர்தல் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. முதலாவது பொதுத்தேர்தலில் இருந்து இது திரும்பத்திரும்ப நடத்தப்பட்டது.கடைசியாக 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. யாரும் அந்த திருத்தத்தை சதி என்று சொன்னது இல்லை.'வாக்கு திருட்டு' என்று பேட்டிகளில் சொல்கிறார்களே தவிர, கோர்ட்டுகளில் சொல்வது இல்லை.

நாட்டை ஆண்ட கட்சி

தேர்தலில் தோற்றவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி போடுகிறார்கள். ஆனால் வெற்றி பெறும்போது அப்படி சொல்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டை ஆண்ட கட்சி, தன்னை தேர்ந்தெடுத்த அதே தேர்தல் முறையை முறைகேடு என்று சொல்கிறது. சில அமைப்புகள் திரும்பத்திரும்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்கின்றன. ஆனால் அரிதாகவே ஆதாரம் அளிக்கின்றன. கோர்ட்டு அறை, மேடை ஆக்கப் பட்டு விட்டது. கோர்ட்டு தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால், நீதித் துறை மீதான நம்பிக்கையை குலைக்கும்வகையில் அவதூறு பரப்பப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com