இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் இன்று ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இமாச்சல பிரதேசத்தில் ரிக்டர் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம்
Published on

சிம்லா,

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கரேரி மாவட்டத்தில் இன்று இரவு 8.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் குவிந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com