

ஜம்மு,
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை ஜூன் 30-ந் தேதி தொடங்குகிறது. கவர்னர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
43 நாட்கள் யாத்திரை நடக்கிறது. வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும். கொரோனா கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என்று கவர்னர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்.