

சிம்லா,
இமாச்சல பிரதேசத்தில் லாஹுல் மற்றும் ஸ்பிடி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிக்கு 50 பேர் கொண்ட குழு மலையேற்றம் மேற்கொண்டிருந்தது. இவர்களில் 30 பேர் ரூர்க்கியில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மாணவர்கள் ஆவர். இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மலையேற்றம் சென்ற அனைவரது தொடர்பும் திடீரென துண்டிக்கப்பட்டது.
இதனால், அவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்ட நிலையில், தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில்,30 -ஐஐடி மாணவர்கள் உட்பட மலையேற்றம் சென்ற அனைவரும் பத்திரமாக இருப்பதாக இமாச்சல பிரதேச முதல் மந்திரி ஜெய் ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.