இந்தியாவில் 45 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவு

நிலக்கரி வளம் மிகுந்த ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்ததால், சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது.
நிலக்கரி கையிருப்பு குறைவு.
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள 45 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைவு

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 45 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதாக மத்திய மின்சார ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில், நிலக்கரித் தேவையில் 25 சதவீதத்துக்கு குறைவான நிலக்கரியுடன் 31 மின்உற்பத்தி நிலையங்கள் இருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 45 ஆக உயர்ந்து விட்டது. இவற்றில் 40 நிலையங்கள், உள்நாட்டு நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிப்பவை.

வட மாநிலங்களில் கனமழை

நிலக்கரி வளம் மிகுந்த ஒடிசா, ஜார்கண்ட், சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்ததால், சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டது. அதனால் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியை கொண்டு செல்லும் பணியும் முடங்கியது. பராமரிப்புப் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com