26 வயது வாலிபருடன்..45 வயது பெண் உல்லாசம்; தொழிலாளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

தொழிலாளி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்
Published on

பாகல்கோட்டை,

தொழிலாளி பிணமாக கிடந்த வழக்கில் தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் வாலிபர். தனது நண்பருடன் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது. இதனால் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா பீலகி அருகே உள்ள மலைப்பகுதியில் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி ஒரு வாலிபர் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் பீலகி போலீசார் விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது அவர் முதோலை சேர்ந்த பிரகாஷ் (வயது 26) என்பதும், கூலித் தொழிலாளியாக வேலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பீலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

இந்த நிலையில், பிரகாஷ் கொலை தொடர்பாக 2 வாலிபர்களை பீலகி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் முதோலை சேர்ந்த பசம்மாவின் மகன் சீனிவாஸ், இவரது நண்பர் நதீம் என்று தெரியவந்தது.

அடிக்கடி தனிமையில் உல்லாசம்

மேலும் விசாரணையில், பிரகாசுக்கும். பசம்மா (வயது 45) வுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இது பற்றி சீனிவாசுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரகாசை கொலை செய்ய சீனிவாஸ் திட் டமிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 27-ந்தேதி பிரகாசை சீனிவாஸ், நதீம் ஆகியோர் சேர்ந்து மலைப்பகுதிக்கு அழைத்து சென்று மதுகுடிக்க வைத்துள்ளனர். குடிபோதையில் இருந்த பிரகாசை அரை நிர்வாணப்படுத்தி, அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு 2 பேரும் தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கைதான சீனிவாஸ், நதீம் ஆகியோர் மீது பீலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com