உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணி; 8 இந்திய ராணுவ வீரர் குழு, கடற்படை குழு, 5 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் 450 இந்தோ திபெத் வீரர்கள், 5 தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணி; 8 இந்திய ராணுவ வீரர் குழு, கடற்படை குழு, 5 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on

புதுடெல்லி,

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் அலெக்நந்தா மற்றும் தவுலிகங்கா ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 2 நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது அங்கு பணியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

இந்த பேரிடரில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்கள் மீட்கப்பட்டன. இன்னும் 197 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள நீர்மின்நிலையத்தில் அமைந்திருகும் சுரங்கப்பாதையில் ஊழியர்கள் பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த பகுதியையொட்டி 13 கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் அந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் 450 இந்தோ திபெத் வீரர்கள், 5 தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:-

உத்தரகாண்ட் வெள்ள மீட்பு பணியில் 450 இந்தோ திபெத் வீரர்கள், 5 தேசிய பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளன. 8 இந்திய ராணுவ வீரர் குழு, கடற்படை குழு மற்றும் விமானப்படையின் 5 ஹெலிகாப்டர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com