உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 49 பேர் பலி

உத்தர பிரதேசத்தில் கடந்த 2 நாட்களில் பெய்த கனமழைக்கு 49 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் கனமழைக்கு 49 பேர் பலி
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த வியாழகிழமையில் இருந்து இதுவரை 49 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் சஹாரன்பூரில் அதிக அளவாக 11 பேர் பலியாகி உள்ளனர். இதேபோன்று ஆக்ரா மற்றும் மீரட் ஆகிய நகரங்களில் தலா 6 பேர் பலியாகி உள்ளனர். மெயின்பூரி பகுதியில் 4 பேரும், காஸ்கஞ்ச் பகுதியில் 3 பேரும், பரேலி, பாக்பத் மற்றும் புலந்த்சாஹர் பகுதிகளில் 2 பேரும் பலியாகி உள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் கான்பூர் தேஹத், மதுரா, காஜியாபாத், ஹாபூர், ரேபரேலி, ஜலான், ஜான்பூர், பிரதாப்கார்ஹ், பண்டா, பிரோசாபாத், அமேதி, கான்பூர் மற்றும் முசாபர்நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் மழைக்கு பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று இடிந்த கட்டிடங்களை அடையாளம் காணும்படியும், அங்கு வசிப்பவர்களை வெளியேறும்படியும் செய்ய அனைத்து மூத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com