திருமணமான 5வது நாளில் நகை, பணத்துடன் மணப்பெண் ஓட்டம்; மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி


திருமணமான 5வது நாளில் நகை, பணத்துடன் மணப்பெண் ஓட்டம்; மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சி
x

திருமணமான 5வது நாளில் நகை, பணத்துடன் மணப்பெண் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டம் பிசொலி கிராமத்தை சேர்ந்த இளைஞருக்கு கடந்த சில நாட்களுக்குமுன் இளம்பெண்ணுடன் திருமணமானது.

திருமணமான 5வது நாளான நேற்று முன் தினம் இரவு புதுமணப்பெண் தனது கணவர், மாமனார், மாமியாருக்கு டீ கொடுத்துள்ளார். அந்த டீயை குடித்த இருவரும் இரவு முழுவதும் உறங்கியுள்ளனர்.

மறுநாள் காலை கண் விழித்து பார்த்தபோது புதுமணப்பெண் வீட்டில் இல்லை. மேலும், வீட்டில் இருந்த 3.15 லட்ச ரூபாய் பணம், தங்கம், வெள்ளி நகைகள் மாயமாகியுள்ளன. மாயமான நகை, பணத்தின் மொத்த மதிப்பு சுமார் 5 லட்ச ரூபாய் ஆகும். புதுமணப்பெண்ணே தனது கணவர் வீட்டில் இருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார் என்பது மாப்பிள்ளை வீட்டாருக்கு பின்னரே தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை வீட்டார் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய புதுமணப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றார். மேலும், இச்சம்பவம் குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

1 More update

Next Story