சோலாப்பூர்- புனே நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து; 5 பேர் உடல் நசுங்கி பலி 6 பேர் படுகாயம்

சோலாப்பூர்-புனே நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிய கோர விபத்தில் 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புனே,

சோலாப்பூர்-புனே நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதிய கோர விபத்தில் 5 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

லாரி மோதி விபத்து

சோலாப்பூர் மாவட்டம் மாதா பகுதியில் தேம்பிரினி மேம்பாலத்தில் நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்று சோலாப்பூர்- புனே நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தாறுமாறாக ஓடி அருகே வந்த டேங்கர் லாரியுடன் பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 2 லாரியிலும் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த 11 பேரை மீட்டனர்.

5 பேர் பலி

இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தரியவந்தது. மேலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு இந்தபூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் பலியான 5 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியானவர்கள் கிசான் ராதோடு (வயது45), சிவாஜிபவார் (30), வியான்கட் தண்குடே (45), சங்கர் காவடே (40), சோம்நாத் மாலி ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இந்த விபத்தால் சோலாப்பூர்- புனே நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com