திருவனந்தபுரத்தில் கார் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கார் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
திருவனந்தபுரத்தில் கார் மீது லாரி மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு
Published on

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவனந்தபுரம் கல்லம்பலம் பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் அந்த கார் எதிரே வந்த மீன் லாரி மீது பலமாக மோதியது. இதில் கார் நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த விஷ்ணு, ராஜீவ், அருண் மற்றும் சுதீஷ் உள்பட 5 பேர் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றி அதன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com