

தானே,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் உல்லாஸ்நகர் பகுதியில் அமைந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை மற்றும் போலீசார் சம்பவ பகுதியில் இருந்து 11 பேரை உயிருடன் மீட்டனர்.
இதன்பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கட்டிட விபத்தில், 12 வயது சிறுவன் உள்பட 5 பேர் சிக்கி உயிரிழந்து உள்ளனர். அவர்களது உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணியும் நடந்து வருகிறது.