மராட்டியத்தில் மேலும் 5 பேருக்கு ஜி.பி.எஸ். தொற்று பாதிப்பு

புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும் 'கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம்' நோய் வேகமாக பரவி வருகிறது.
புனே,
மராட்டியத்தில் ஜி.பி.எஸ். எனப்படும் எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இந்த தொற்று புனே பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. இந்த மர்ம வியாதிக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நோயால் புனேவில் மேலும் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தொற்று நரம்பு மண்டலத்தை பாதிக்க தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளும் ஏற்படுகின்றன. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story






