கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்

கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு காரில் நேபாளத்திற்கு திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.
கார் விபத்தில் நேபாளத்தை சேர்ந்த 5 பேர் பலி; கும்பமேளாவுக்கு சென்று திரும்பியபோது சோகம்
Published on

பாட்னா,

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உலகம் முழுவதில் இருந்து கோடிக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே, நேபாளத்தை சேர்ந்த 9 பேர் காரில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வந்து கும்பமேளாவில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு நேற்று 9 பேரும் காரில் நேபாளத்திற்கு புறப்பட்டனர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டம் மதுபானி நகரில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது அதேசாலையில் சிலர் பைக் சாகசம் செய்துகொண்டிருந்தனர். பைக்கில் சாகசம் செய்தவர்கள் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த நேபாளத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com