சந்திரபாபுநாயுடு பங்கேற்ற ஊர்வலத்தில் சரமாரி கல்வீச்சு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பர் காயம்

குப்பம் அருகே சந்திரபாபுநாயுடு பங்கேற்ற ஊர்வலத்தில் குண்டர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கினர். அதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
சந்திரபாபுநாயுடு பங்கேற்ற ஊர்வலத்தில் சரமாரி கல்வீச்சு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பர் காயம்
Published on

திருப்பதி,

சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதிக்கு உட்பட்ட லோகோலுபள்ளியில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செயலாளர் சந்திரபாபுநாயுடு நற்று லோகோலுபள்ளிக்கு வந்தார்.

முன்னதாக அவர் கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் பொதுக்கூட்ட மேடையை நோக்கி ஊர்வலமாக சென்றார். அப்போது திடீரென ஏதோ ஒரு பகுதியில் இருந்து குண்டர்கள் சரமாரியாக சந்திரபாபுநாயுடுவை நோக்கி கற்களை வீசினர். அதிர்ச்சி அடைந்த கட்சியினர், சந்திரபாபுநாயுடுவை நடுவில் வைத்து அரண்போல் சூழ்ந்து பாதுகாத்தனர்.

மேலும் சந்திரபாபுநாயுடுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகளை கட்டி வைத்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கொடிகளை தெலுங்கு தசம் கட்சியினர் அகற்ற முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியினர் மீது திடீரன ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் கற்களை எடுத்து வீசினர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டனர். அதில் புதுகுரு கிராம போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர். அங்கிருந்த போலீசார் விரைந்து வந்து, கல்வீச்சில் ஈடுபட்டவர்களை பிடித்தனர்.

அப்போது சந்திரபாபுநாயுடு கூறுகையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அரசு இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்கும் எனத் தெரியவில்லை, என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com