

புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. ஆளும் பா.ஜனதாவிற்கு பெரும் பின்னடைவாக முடிவுகள் அமைந்துள்ளது.
சத்தீஷ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தானில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.