மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய 5 ஆயிரம் பேர் கண்டுபிடிப்பு

சமீபத்தில், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய 77 பேர், முதல்கட்டமாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக பிரேன்சிங் கூறினார்.
மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறிய 5 ஆயிரம் பேர் கண்டுபிடிப்பு
Published on

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலம்,  இனக்கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மியான்மர் நாட்டை ஒட்டி இருப்பதால், அங்கிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் பிரச்சினையை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், முதல்-மந்திரி பிரேன்சிங் தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மணிப்பூரின் காம்ஜோங் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 5 ஆயிரத்து 557 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்து 173 பேரின் 'பயோமெட்ரிக்' தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அகதிகள் முகாம்களில் தங்கி இருப்பவர்களின் 'பயோமெட்ரிக்' தரவுகளும் பெறப்பட்டு வருகின்றன. சட்டவிரோதமாக குடியேறிய அனைவருக்கும் எங்கள் அரசு மனிதாபிமான உதவிகளை அளித்து வருகிறது. மிகவும் உணர்வுப்பூர்வமாக நிலைமையை கையாண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com