ரூ.5 ஆயிரம் லஞ்ச வழக்கில் வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை

ரூ.5 ஆயிரம் லஞ்ச வழக்கில் வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ரூ.5 ஆயிரம் லஞ்ச வழக்கில் வணிக வரித்துறை அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை
Published on

சித்ரதுர்கா-

சித்ரதுர்கா மாவட்டம் என்.ஆர்.புரா டவுன் பகுதியை சேர்ந்தவர் பாண்டு. இவர் அப்பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் பாண்டு கடையின் உரிமத்தை மாற்ற தரிகெரேவில் உள்ள வணிக வரித்துறை அதிகாரி பாலாக்ஷப்பா என்பரிடம் கடந்த 2013-ம் ஆண்டு மனு ஒன்றை கொடுத்தார். மனுவை பெற்றுக் கொண்ட பாலாக்ஷப்பா கடையின் உரிமத்தை மாற்ற ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என பாண்டுவிடம் கூறினார். அப்போது பணத்தை தருவதாக கூறிய பாண்டு, பின்பு பணம் கொடுக்க மனமில்லாமல் லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து லாக் அயுக்தா போலீசார் பாண்டுவிடம் அறிவுரை கூறி ரசாயன பொடி தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். இதையடுத்து பாண்டு வணிக வரித்துறை அதிகாரியிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் பாலாக்ஷப்பாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்பு அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதுதொடர்பான வழக்கு சித்ரதூர்கா கோர்ட்டில் நடந்து வந்தது.

லோக்அயுக்தா போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சுபா கவுடா தீர்ப்பு கூறினார். வணிகவரித்துறை அதிகாரி பாலாக்ஷப்பா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியது ஆதாரத்துடன் நிரூபணமாகியதால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com