உத்தரபிரதேசம்: அரிசி ஆலையில் விஷவாயு தாக்கி 5 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பஹராய்ச் மாவட்டம் பைஹந்தா பகுதியில் அரிசி ஆலை உள்ளது
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பஹராய்ச் மாவட்டம் பைஹந்தா பகுதியில் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.
இந்நிலையில், அரிசி ஆலையின் டிரையர் எந்திரத்தில் கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு 8 தொழிலாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். எஞ்சிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






