மராட்டியத்தில் 5 வயது சிறுமி மர்ம மரணம்; பெற்றோர் உள்பட 3 பேர் கைது

மராட்டியத்தில் 5 வயது சிறுமி மரண வழக்கில் பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
மராட்டியத்தில் 5 வயது சிறுமி மர்ம மரணம்; பெற்றோர் உள்பட 3 பேர் கைது
Published on

நாக்பூர்,

மராட்டியத்தின் நாக்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஒன்றிற்கு 5 வயது சிறுமியின் உடலை தூக்கி கொண்டு வந்த பெற்றோர் பின்னர் தப்பியோடி விட்டனர். இதுபற்றி விசாரணை நடத்தியதில், சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உள்ளனர் என தொடக்க கட்ட விசாரணை தெரிவிக்கிறது.

இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் கூறும்போது, நாக்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு, 5 வயது சிறுமியின் உடலுடன் வந்த பெற்றோர் பின்னர் தப்பியோடி விட்டனர். நடந்த விசாரணையில், பெற்றோரின் மொபைல் போனில் சிறுமியை அவர்கள் அடிக்கும் காட்சிகள் கொண்ட சில வீடியோக்களை பார்த்தோம் என கூறியுள்ளார்.

சிறுமியின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பெற்றோரின் மொபைல் போனில், அவர்கள் சில சடங்குகளை செய்து அதனை வீடியோ பதிவும் செய்துள்ளனர். அந்த காட்சிகளையும் போலீசார் கண்டறிந்து உள்ளனர். அதனால், சிறுமியின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் பற்றி தெரிய வரும். இதுவரை, பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com