விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக கே.எஸ்.ஆர்.டி.சி. தெரிவித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு 500 சிறப்பு பஸ்கள்; கே.எஸ்.ஆர்.டி.சி. தகவல்
Published on

பெங்களூரு:

500 சிறப்பு பஸ்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 29, 30-ந்தேதிகளில் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஒரநாடு, தாவணகெரே, உப்பள்ளி, தார்வார், பெலகாவி, விஜயாப்புரா, கோகர்ண, சிர்சி, கார்வார், ராய்ச்சூர், கலபுரகி, பல்லாரி, கொப்பல், யாதகிரி, பீதர், திருப்பதி, விஜயவாடா, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மதுரை, சென்னை

பெங்களூரு விஜயநகர், ஜலஹள்ளி கிராஸ், நவ்ரங் (ராஜாஜிநகர்), மல்லேசுவரம் 18-வது கிராஸ், பனசங்கரி, ஜீவன்பீமாநகர், ஐ.டி.ஐ. கேட், கங்காநகர், கெங்கேரி சாட்டிலைட் ஆகிய பகுதிகளில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, மங்களூரு, குந்தாப்புரா, சிருங்கேரி, ஒரநாடு, குக்கேசுப்ரமணியா, தர்மஸ்தலா பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். மேலும், பெங்களூரு மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து மைசூரு, உன்சூர், பிரியாபட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகர், மடிகேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

இதேபோல் சாந்திநகர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

கட்டண சலுகைகள்

இந்த சிறப்பு பஸ்களுக்கு www.ksrtc.karnataka.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு மையங்களிலும் சென்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு டிக்கெட்டில் 4 அல்லது அதற்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்யும்பட்சத்தில், அவர்களுக்கு 5 சதவீத கட்டண சலுவை வழங்கப்படும். இதேபோல் இருமார்க்கமாகவும் முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com