

புதுடெல்லி,
கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்காளதேசம், கடந்த 1971 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசத்தின் முக்தி வாகினி படை இந்திய ராணுவத்தின் உதவியோடு வெற்றி பெற்றது. வங்காளதேசம் விடுதலை அடைந்த 50-வது ஆண்டு தினத்தை வங்காளதேச மக்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், வங்காளதேசத்திற்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய அரசு மக்கள் மக்கள் சார்பாக வங்காளதேச மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மிகவும் உறுதியாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.