கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு

இந்த ஆண்டுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரை சமீபத்தில் தொடங்கியது.
கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 52 இந்தியர்கள் நேபாளத்தில் தவிப்பு
Published on

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் கைலாஷ் பனிமலை அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் இருந்து ஏராளமானோர் ஆண்டுதோறும் புனித யாத்திரை செல்வார்கள்.

இந்த ஆண்டுக்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரை சமீபத்தில் தொடங்கிய நிலையில், கடந்த 20-ந்தேதி முதல் குழு இந்திய-சீன எல்லையான நாதுலா பாஸ் என்ற இடத்தை கடந்து சென்றது. நேபாளம் வழியாக சென்ற பக்தர்களில் 52 பேரிடம் சீன நாட்டின் விசா மற்றும் நுழைவு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. புனித யாத்திரை அழைத்து சென்ற தனியார் பயண நிறுவனங்கள் அதற்கான முழுமையான ஏற்பாடுகளை செய்யா ததால், பக்தர்கள் 52 பேரும் நேபாளத்திலேயே தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான தகவலை தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) கட் சியை சேர்ந்த சுப்ரியா சுலே, எம்.பி., சமூக வலைதளத்தில் பதிவிட்டு, வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு உடனடியாக உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடர்பான விசா உள்பட அனைத்து பயண ஆவணங்களும் கிடைக்காத வரை பக்தர்கள் யாரும் அங்கு புறப்பட் டுச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com