நாடு முழுதும் 55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன; மத்திய சுகாதார மந்திரி

நாடு முழுதும் இதுவரை 55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
நாடு முழுதும் 55 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன; மத்திய சுகாதார மந்திரி
Published on

புதுடெல்லி,

நாட்டில் கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, நாடு முழுதும் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 55 கோடியை கடந்து சாதனை அளவை எட்டியுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com