உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஏர் இந்தியாவின் நேர்காணலுக்கு சென்ற இண்டிகோ விமானிகள்; விமான சேவை கடும் பாதிப்பு!

இண்டிகோ விமானிகள் சிலர் விடுமுறை எடுத்து ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு சென்றதால் விமான சேவை பாதிப்பு அடைந்தது.
உடல்நிலை சரியில்லை எனக் கூறி ஏர் இந்தியாவின் நேர்காணலுக்கு சென்ற இண்டிகோ விமானிகள்; விமான சேவை கடும் பாதிப்பு!
Published on

புதுடெல்லி,

ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு இண்டிகோ விமான நிறுவனத்தை சார்ந்த விமானிகள் சிலர் சென்றதால் விமான சேவை பாதிப்பு அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக 55 சதவீத விமான சேவை கடும் பாதிப்புக்குள்ளானது.

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ ஏப்ரல் 4 அன்று, ஊதியக் குறைப்புக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யத் திட்டமிட்டிருந்த சில விமானிகளை சஸ்பெண்ட் செய்தது.

இதனை தொடர்ந்து, இண்டிகோ தலைமை அதிகாரி ரான்ஜாய் தத்தா ஏப்ரல் 8 அன்று ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், சம்பளத்தை உயர்த்துவது கடினமான பிரச்சினை என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஏர் இந்தியாவை தன் வசப்படுத்திய டாடா நிறுவனம், விமானிகளை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலை கடந்த சனிக்கிழமை அன்று டாடா நிறுவனம் நடத்தியது.

அதில் பங்கேற்க, உடல்நிலை சரியில்லை எனக்கூறி இண்டிகோ விமான நிறுவனத்தை சார்ந்த விமானிகள் சிலர் விடுமுறை எடுத்து ஏர் இந்தியா நடத்திய நேர்காணலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வருவதாக, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம்(டிஜிசிஏ) கட்டுப்பாட்டாளர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com