கர்நாடக சட்டசபை தேர்தல்; பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன

கர்நாடக சட்டசபை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன.#KarnatakaElections2018
கர்நாடக சட்டசபை தேர்தல்; பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56% வாக்குகள் பதிவாகியுள்ளன
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசின் பதவி காலம் முடிவடைய இருப்பதையொட்டி, 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் தொடங்கியது. இதில் வாக்காளர்கள் வரிசையில் வந்து வாக்களித்து வருகின்றனர்.

தேர்தல் நடைபெறும் 222 தொகுதிகளிலும் சுமார் 2,600 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 56 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் பாரதீய ஜனதாவின் முதல் அமைச்சர் வேட்பாளரான எடியூரப்பா ஷிமோகா அருகே ஷிகர்பூரில் வாக்களித்து உள்ளார். இதேபோன்று மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சரான சதானந்த கவுடா புட்டூரில் வாக்களித்து உள்ளார். இதேபோன்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, தனது மனைவி மற்றும் மகனுடன் ஹசன் மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து உள்ளார்.

இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.வாக்குச்சாவடியில் சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்ற அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், நான் ஓட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். இதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என கும்ப்ளே கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள பாதாமி பகுதியில் சித்தராமையா-ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் கைகலப்பாகவும் மாறியுள்ளது. மேலும் சில இடங்களிலும் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து வாக்கு பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 15 ந்தேதி எண்ணப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com