மத்திய பல்கலைக்கழகங்களில் 5,606 பேராசிரியர் பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆயிரத்து 606 பேராசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.
மத்திய பல்கலைக்கழகங்களில் 5,606 பேராசிரியர் பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

புகழ்பெற்ற ஐ.ஐ.டி.யில் மட்டும் 2 ஆயிரத்து 806 இடங்கள் காலியாக இருக்கின்றன. அதே போல் என்.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.இ.எஸ்.டி.யில் 870 பணியிடங்களும், ஐ.ஐ.எம்ல் 283 பணியிடங்களும் காலியாக உள்ளன.

ஓய்வு மற்றும் ராஜினாமா காரணமாகவும், அதிகமான மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதாலும் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிக்கு காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் தொடர்ச்சியான செயல்முறையாகி விட்டது.

எனினும் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப ஆய்வு மாணவர்களை பேராசிரியர்களாக நியமிப்பது, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவது, கவுரவ பேராசிரியர்களை நியமிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த தகவல்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com