

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் கூறியதாவது:-
நாடு முழுவதும் சுப்ரீம் கோர்ட்டுகள், 25 ஐகோர்ட்டுகள், மாவட்ட கோர்ட்டுகள் மற்றும் கீழ்க்கோர்ட்டுகளில் மொத்தம் 5 கோடியே 64 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 96 ஆயிரத்துக்கும் மேற் பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஐகோர்ட்டுகளில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட வழக்குகள், 30 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.