

புதுடெல்லி,
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. காலை வேளைகளில் அடர்பனிமூட்டம் நிலவுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்றன.
கடும் குளிரும் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக 59 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 21 ரயில்கள் காலதாமதம் ஆகியுள்ளன. 13 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. #Delhi #fog