உத்தரபிரதேசத்தில் 594 கி.மீ. நீளமுள்ள கங்கை விரைவு சாலை- 29 -ம் தேதி திறப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.37 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட கங்கை விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 29-ந்தேதி திறந்து வைக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் 594 கி.மீ. நீளமுள்ள கங்கை விரைவு சாலை- 29 -ம் தேதி திறப்பு
Published on

மீரட் - பிரயாக்ராஜ் இடையே 594 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 6 வழிச்சாலை, உத்தரபிரதேச மாநிலத்தின் மிக நீளமான விரைவுச்சாலை ஆகும். மேலும் இந்தியாவின் மிகப் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்த சாலை மீரட், ஹாபூர், புலந்த்ஷஹர், அம்ரோஹா, ஷாஜகான்பூர், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வழியாக செல்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மாபெரும் திட்டம் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு - தெற்கு பகுதிகளை இணைக்கும் கங்கை விரைவு சாலையால் பயண நேரம் குறைவதுடன், தொழிற்சாலைகளுக்கு இடையிலான போக்குவரத்து மேம்படும். இதனால் புதிய முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாஜகான்பூரில் இந்த விரைவு சாலையில் அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் வசதி கொண்ட 3.5 கி.மீ. நீள ஓடுபாதையும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த கங்கை விரைவு சாலையை பிரதமர் மோடி வருகிற 29-ந்தேதி திறந்து வைக்க உள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com